கர்பரக்ஷ்சாம்பிகை அம்பாளின் மகிமைகள் மற்றும் குழந்தை பேறு கிடைப்பதற்காகச் செய்யும் பரிகாரங்கள்
"கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும்
கண்ணாம் கருகாவூ ரெந்தை தானே"
திருக்கருக்காவூர் திருத்தலம்
குழந்தை வரம் வேண்டுபவர்க்கு குழந்தை வரம் தருபவள் கர்பரக்ஷ்சாம்பிகை அம்பாள். இத்திருத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசத்தை அடுத்த
திருக்கருக்காவூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்திற்க்கு
குழந்தை வரம் வேண்டுபவர்கள் அம்பாளின் அருள் வேண்டி தரிசிக்கவருவார்கள் அவ்வாரு
அவர்கள் தரிசிக்க வரும்பொழுது அம்பாளின் பிரசாதமாக நெய் வழங்கப்படும். அந்த நெய்யினை
1/2 கிலோ சுத்தமான நெய்யுடன் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த நெய்யினை கணவண், மனணவி இருவரும் கர்பரட்சாம்பிகை அம்பாளை நினைத்து 45நாட்கள் இரவில் சிரிதளவு இந்த நெய்யினை உட்கொண்டு வரவேண்டும் அவ்வாரு
அவர்கள் உட்கொண்டுவந்தால் அவர்களுக்கு நோய்நெடியற்ற நல்ல ஆரோக்கியமான குழந்தை செல்வம் உண்டாகும்.
குறிப்பு: பெண்கள் இயற்கை உபாதை காலகட்டத்தில் 5நாட்களுக்கு இந்த
நெய்யினை உட்கொள்ளக் கூடாது. அந்த சமையத்தில் கணவர் மட்டும் இந்த நெய்யினை
உண்டுவரலாம்.
திருமணம் கூடி வர படிக்கு நெய் மெழுகுதல்
திருமணம் கூடிவராத கன்னியர்களும், பல ஆண்டுகளாக குழந்தையில்லாத பெண்களும்
இக்கோயிலுக்கு நேரில் சென்று கர்பரக்ஷ்சாம்பிகை அம்பாள் சன்னதி
படியில் சிறிது நெய்யால் மெழுகிக் கோலமிட்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
இவ்வாறு செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தை இல்லாதவர்களுக்கு
மக்ப்பேறு உண்டாகும்.
சுகப்பிரசவம் அடைய விளக்கெண்ணெய்
கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக இத்திருக்கோயிலில்
ஸ்ரீ கர்பரக்ஷ்சாம்பிகை திருப்பாதத்தில் வைத்து விளக்கெண்ணெய் மந்திரித்து கொடுக்கப்படுகிறது. இது மிகவும் விசேஷமானதாகும்.
இது போன்று வேறு எந்த திருக்கோயிலிலும் மந்திரிக்கப்பட்ட எண்ணெய் வழங்குவதில்லை
எனவே இது மிகவும் சிறப்புடையதாகும். பிரசவ வலி ஏற்படும் போது வயிற்றில்
தடவினால் எந்தவிதமான கோளாறுகளும், பேறுகால ஆபத்துகளும் மற்றும் எந்தவிதமான பின்
விளைவுகளும் இல்லாமல் சுகப்பிரசவம் ஆகும். மேலும் வெளியூர் பக்தர்களுக்காக
இந்த விளக்கெண்ணெய் தபால் மூலம் அனுப்பிவைக்கப்படும் இதற்கான பணம் ரூ.200/-
மணியார்டர் மூலம் கோயில் நிர்வாக அதிகாரிக்கு அனுப்பிவைக்க வேண்டும் அல்லது
வங்கிக்கணக்கிர்க்கும் அனுப்பலாம்.
கோயிலுக்கு பணம் அனுப்ப வேண்டிய முகவரி
நிர்வாக அதிகாரி
அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில்
திருக்கருகாவூர், பாபநாசம் (தாலுகா),
தஞ்சாவூர் (மாவட்டம்), தமிழ்நாடு.
போண் : 04374 - 273423.
செல் : 88 70 05 82 69.
இணையதலம் : www.garbaratchambigaitemple.org
மின்னஞ்சல் : eomullaivananathartkr@gmail.com
பிரசாதங்களை பெறுவதற்கான வழிமுறைகள்
கர்பரக்ஷ்சாம்பிகை அம்பாளின் பிரசாதங்களை நேரடியாக முல்லைவனநாதர் சுவாமி திருக்கோயிலில்
சென்று பெறலாம் அல்லது www.garbaratchambigaitemple.org என்ற இணையதள முகவரில் பெறலாம். இந்த இணையதள முகவரியின் வாயிலாக அனைத்து விதமான பிரசாதங்களையும் பாதுகாப்பான முறையில் உங்கள் இல்லங்களுக்கே
அனுப்பிவைக்கப்படும். இதற்கான தொகையினை நீங்கள் இணையதளம் வாயிலாக
வங்கிக்கணக்கில் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வெளியூர் அன்பர்க்ளுக்காகவே இணையதளம் வாயிலாக பிரசாதங்களை பெறும்
வழிமுறை செய்யப்பட்டுள்ளது. இந்த வழிமுறையானது வெளியூர் அன்பர்க்ளுக்கு மிகவும் பயனுல்லதாக அமையும்.
தபால் மூலம் பிரசாதங்களை பெறுவதற்கான கட்டண விபரங்கள்
நெய் (உள்நாடு) ரூ.200
நெய் (வெளிநாடு) ரூ.500
எண்ணெய் (உள்நாடு) ரூ.200
எண்ணெய் (வெளிநாடு) ரூ.500
கட்டளை அர்ச்சனை ஒரு வருடம் (உள்நாடு) ரூ.300
கட்டளை அர்ச்சனை ஒரு வருடம் (வெளிநாடு) ரூ.600
நவகோடி நெய்தீபம் ரூ.75
அன்னதானம் நாள் 1-க்கு (50 நபர்களுக்கு) ரூ.1500
அன்னதானம் நாள் 1-க்கு (100 நபர்களுக்கு) ரூ.3000
திங்கள், செவ்வாய், புதன், வியாழன்
அன்னதானம் நாள் 1-க்கு (200 நபர்களுக்கு) ரூ.6000
வெள்ளி, சனி, ஞாயிறு
சகஸ்ரநாம அர்ச்சனை ரூ.100
புனுகு சாத்த கட்டணம் (உள்நாடு) ரூ.100
புனுகு சாத்த கட்டணம் (வெளிநாடு) ரூ.300
அபிஷேகம் ரூ.700
தங்கத்தொட்டில் ரூ.550
அம்பாள் சந்தனகாப்பு செய்ய ரூ.10000
நிரந்தர கட்டளை (உள்நாடு) ரூ.3000
நிரந்தர கட்டளை (வெளிநாடு) ரூ.6000
பிரார்தனைகள்
குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கும், குழந்தை பேறு பெற்றவர்களுக்கும் நாட்டிலேயே
முதன் முறையாக தங்கத் தொட்டில் பிரார்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திருத்தலத்தில் குழந்தை பேறு பெற்றவர்கள்
துலாபாரம் பிரார்த்தனையை நிறைவேற்றலாம் இவ்வாறு குழந்தையின் எடைக்கு நிகறானப் பொருட்களை வைக்கலாம். அவை, வாழைப்பழம், சக்கரை,
வெல்லம், அரிசி, தங்கம், வெள்ளி போன்ற பொருட்களிள் யவையேணும் ஒன்றினை
வைக்கலாம்.
குழந்தை வரம் வேண்டுபவர்கள் இத்திருத்தலத்தில் அண்ணதானம் செய்வது மிகவும் சிறப்பாகும். அண்ணதானம் என்பது ஒருவரின் பசியைப் போக்குவதாகும். இன்றைய நிலையில் அன்றாட
உணவிற்காக அல்லற்படும் ஏழை மக்களுக்கு நாம் உணவளிப்பது மிகவும்
சிறப்புடையதாகும் இவ்வாறு செய்வதன் மூலம் நம் முன்னோர்கள் செய்த பாவைங்கள்
நீங்கும் மற்றும் நாம் செய்த சிறு உதவி நம் தலைமுறைகளைக் காக்கச்
செய்யும்.
மேலும் கர்பரக்ஷ்சாம்பிகையின் 108 போற்றி அதனை கூறி வந்தால் குழந்தையின்
ஆரோக்கியம், குழந்தையின் வளர்ச்சி, மற்றும் கருச்சிதைவு ஏற்ப்படாமலும் காக்க முடியும்.
மேலும் இம்மந்திரத்தை கணவன், மாமியார், மாமனார், பெண்ணின் தாய் மற்றும் பெண்ணின் தந்தையார் இம்மந்திரத்தை கூறலாம் இவ்வாறு இம்மந்திரத்தை கூறுவதன்
மூலம் மேலே குறிப்பிட்ட பலன்களை அடையலாம்.
திருக்கோயில் நடைத் திறப்பு
அதிகாலை 5.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும்
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் வழிபாட்டிற்காகத்
திறக்கப்பட்டிருக்கும்.
அபிஷேகம்
திங்கள் முதல் சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு மட்டும் அபிஷேகம் நடைபெறும்.
ஞாயிற்றுக்கிழமை அபிஷேகம் கிடையாது. அபிஷேகம் செய்ய விரும்புபவர்கள்
இருதினங்களுக்கு முன்னதாக தொலைபேசி மூலம் முன்பதிவு செய்து கொள்ளவும். அபிஷேகக்
கட்டணத்தை நேரில் வந்து செலுத்தலாம். முன்பணம் அனுப்ப வேண்டியதில்லை.
கல்யாணமாக மற்றும் குழந்தை உண்டாகுவதற்கான பிரார்தனை ஸ்லோகம்
ஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம்
தேவேந்திர பிரியபாமினி
விவாக பாக்யம் ஆரோக்யம்
புத்ரலாபம்ச் தேஹிமே
பதிம் தேஹி சுதம் தேஹி
சௌபாக்கியம் தேஹிமே சுபே
சௌமாங்கல்யம் சுபம் ஞானம்
தேஹிமே கர்ப்பரஷகே
காத்யாயினி மஹாமாயே
மஹாமாயோகின்யதீஸ்வரி
நந்த கோப சுதம் தேவி
பதிம் மே குருதே நம
கண்காட்டு நுதலானும்
கனல் காட்டு கையானும்
பெண்காட்டு முருவானும்
பிறைகாட்டுச் சடையானும்
பன்காட்டு மிசையானும்
பயிர் காட்டுப் புயலானும்
வெண் காட்டி லுறைவானும்
விடை காட்டுங் கொடியானே
ஸூகப்பிரசவம் ஆக இந்த ஸ்லோகத்தை உச்சரிக்கவும்
ஹே சங்கர ஸ்மரஹர பிரம்மதாதி நாதரி மன்னாத சாம்ப சசிசூட
ஹரதிரிசூலின் சம்போஸூகபிரசவ க்ருத்பவமே தயாளோ ஹேமாதவி வனேச பாளையமாம் நமஸ்தே.
இம்மந்திரத்தை கர்பினிப்பெண்கள் உச்சரித்து வந்தால் ஸூகப்பிரசவம் உண்டாகும்.
கர்பரக்ஷ்சாம்பிகை காயத்திரி மந்திரம்
ஓம் கர்ப்ப ரக்ஷ்சாம் பிகாயைச்ச வித்மகே
மங்கள தேவதான்யச்ச தீமகே
தன்னோ தேவி பிரஜோதயாத்
கர்பரக்ஷ்சாம்பிகை பாடல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்க
கர்பரக்ஷ்சாம்பிகை 108 போற்றியை பதிவிறக்கம் செய்ய கிழே கொடுக்கப்பட்டுள்ள பதிவிறக்கம் (Download) பயன்படுத்தி இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் சில கர்பரக்ஷ்சாம்பிகை பாடல்களை பதிவிறக்கம் செய்ய கிழே கொடுக்கப்பட்டுள்ள பாடல்களின் பெயர்களுக்கு அருகே இருக்கும் பதிவிறக்கம் (Download) பயன்படுத்தி இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பிரதோஷ கால பலன்கள்
சுக்ல பட்ஷம், கிருஷ்ண் பக்ஷ்ஷம்
என்னும் இரண்டு பக்ஷ்ஷத்திலும்
வருகிற திரயோதசி திதியில் சூரியன் அஸ்தமனமாகும் முன் பின் மூன்றே முக்கால்
நாழிகையும் உள்ள காலம் பிரதோஷம் எனப்படும் சுமார் 4.30 முதல் 7.30 வரையும்
நச்சத்திரங்கள் உதயம் ஆகும் காலம் வரை சிவன் நந்தியின் இரு கொம்புகளுக்கு
இடையே நின்று புரிகிறார். அந்த நேரத்தில் தரிசனம், பிரதட்சனம் செய்தால் ஒரு
பிரதட்சனத்திற்கு கோடி பிரதட்சனம் செய்த பலன் கிடைக்கும். பிரதோஷத்திலேயே
மிகச் சிறந்த பிரதோஷம் சனிப் பிரதோஷம் மற்றும் சோமப் பிரதோஷம் ஆகும்.
திருக்கருகாவூர் திருத்தலத்தின் வரலாறு
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் இப்பூவுலகில் மக்கள் பெற்று
உய்யும் வண்ணம் பரம கருணாநிதியாகிய சிவபெருமான் திருவருளே திருமேனியாக்க்
கொண்டு எழுந்தருளியிருக்கும் தலங்கள் பலப் பலவாகும். அவற்றுள் மூர்த்தி,
தலம், தீர்த்தம் ஆகிய சிறப்புகளுடன் மூவர் தேவாரத்தையும் பெற்று மக்கள்
பலரும் நாளும் வந்து தம் காரியசித்தியை அடையும் தலமாக விளங்கும்
இத்திருக்க்ருகாவூர் மிகச் சிறப்புடையதாகும்.
ஸ்தல இருப்பிடம்
இத்தலம் நம் நாட்டின் சிறப்பில் முதலிடம் பெற்று விளங்கும் 275 தேவாரத்
தலங்களுள் ஒன்றாய் உள்ளது. சோழ நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில்
பாபநாசத்திற்குத் தெற்கே ஆறு கிலோ மீட்டர் தூரத்திலும், கும்பகோணத்திற்கு
தென்மேற்கில் வடக்கில் 20 கிலோ மீட்டரிலும், சாலியமங்கலத்திற்கு வடக்கில் 10 கிலோ மீட்டரிலும், தஞ்சாவூருக்கு வடக்கில் 20 கிலோ மீட்டரிலும், வெட்டாற்றின் தென்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. இந்நான்கு
திசைகளில் இருந்தும் வந்து போகப் பேருந்து வசதிகள் நிறைய உள்ளன.
ஸ்தல விருக்ஷ்ஷம்
மிகப் பழமையான காலத்தே நம் முன்னோர்கள் கானகத்தை இருப்பிடமாகக் கொண்டு
வாழ்ந்தனர். அப்போது இறைவனது உருவத்தை மரத்தடியில் எழுந்தருள்ச் செய்து
வழிபட்டனர். பின்னர் நாகரீக வளர்ச்சியில் காடு கெடுத்து நாடாக்கப்பட்ட பின்
தெய்வங்களுக்கும் பெருங்கோயில்கள் அமைக்கப்பட்டன. இவ்வாறு
கோயில்கள் அமைக்கப்பட்ட போதிலும் ஆதியில் இருந்து மரத்தினை அழிக்காது, அதனை
இன்றளவும் சுவாமிக்கு அருகில் ஸ்தல விருக்ஷ்ஷம் (ஸ்தல மரம்) என்ற பெயரில் வளர்த்து வருகின்றார்கள். அவ்வகையில்
இத்தலத்தின் ஆதி மரம், முல்லையாகும். இதன் பெயரிலேயே இத்தலம் முல்லை வனம்
(மாதவி வனம்) எனவும் பெருமான் முல்லைவனநாதர் (மாதவிவனேசர்) என்றும்
அழைக்கப்படுகிறார்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில்
திருக்கருகாவூர், பாபநாசம் (தாலுகா),
தஞ்சாவூர் (மாவட்டம்), தமிழ்நாடு.
போண் : 04374 - 273423.
செல் : 88 70 05 82 69.
"அரிது அரிது மானிடராதல் அரிது
அதனினும் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல்
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்தாலும்
ஞானமுன் கல்வியும் பயத்தல் அரிது
ஞானமுன் கல்வியும் நயத்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்தக் காலையில்
வானகம் திறந்து வழிவிடுமே"
அனைவரும் வருக! அம்பாளின் அருள் பெருக!